மறைந்த ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ திருமகன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ திருமகன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


கோவை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் நேற்றைய தினம் மாரடைப்பால் உயிரிழந்தார்.



இந்நிலையில், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருமகன் உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.



இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமகனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோட்டுக்கு சென்றார்.

இதையடுத்து அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதிவேந்தன், கே.என்.நேரு மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

கோவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், உட்பட கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோரும் முதல்வருடன் ஈரோடு சென்று திருமகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...