கோவை மாவட்ட காவல்துறை சார்பில் குறைதீர்ப்பு பெட்டிசன் மேளா - 87 மனுக்கள் முடித்து வைப்பு..!

கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி பத்ரி நாராயணன் தலைமையில், நடைபெற்ற இந்த குறைதீர்ப்பு பெட்டிசன் மேளாவில் பெறப்பட்ட 116 மனுக்கள் மீது அதிகாரிகள் மறு விசாரணை செய்து நடவடிக்கை.


கோவை: தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து, மறு விசாரணை செய்வதற்காக மாதம் 2 அல்லது 3 முறை மக்கள் குறைதீர்ப்பு பெட்டிசன் மேளா நடைபெற்று வருகிறது.



அதன்படி, கோவை மாவட்ட காவல்துறை சார்பில் மூன்றாவது குறை தீர்ப்பு பெட்டிசன் மேளா, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன், தலைமையில் நடைபெற்ற இந்த பெட்டிசன் மேளாவில் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான மறுவிசாரணையை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு, அந்த மனுக்களுக்கு சமூக தீர்வு காணப்பட்டது.

நேற்றைய தினம் (04.01.2023) இந்த பெட்டிசன் மேளாவில் நிலுவையில் இருந்த குடும்பப் பிரச்சனை, பண பரிமாற்ற பிரச்சனை மற்றும் இட பிரச்சினை தொடர்பான 116 மனுக்கள் பெறப்பட்டது.

இதில் 3 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படும், 7 மனுக்கள் மீது மனு ரசீதுகள்(CSR) பதிவு செய்யப்படும், 19 மனுக்கள் மீது உயர் அதிகாரிகள் மேல் நடவடிக்கைக்காக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 87 மனுக்கள் சுமூகமான முறையில் முடித்து வைக்கப்பட்டன.



இந்த குறைதீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் பங்கேற்று பொது மக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.



அதேபோல் பிற நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் தீர்வு காணலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...