கோவை சூலூரில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை - ஒடிசா இளைஞர் கைது..!

சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒடிசா மாநில இளைஞரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், 6.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவினரும் கஞ்சா மற்றும் குட்கா கடத்தல் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட்டுகளை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் கண்ணம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார் சிங் (32) என்பவரது அறையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், அங்கு அதிகளவில் கஞ்சா சாக்லேட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ஒடிசா மாநில இளைஞர் மனோஜ் குமார் சிங்கிடம் இருந்து 6.5 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...