ஈஷாவை தமிழக அரசு கையகப்படுத்த வலியுறுத்தி மார்க். கம்யூ. கட்சியின் கோவை மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்..!

கோவையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில், ஈஷாவை தமிழக அரசு கையகப்படுத்த வலியுறுத்தியும், பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றம்.


கோவை: கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு கூட்டம் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், கோவை மக்களவை உறுப்பினர் P.R.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு,

1) நீர்வழி மற்றும் யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் பல்வேறு மனித இழப்புகளுக்கு காரணமாக உள்ள ஈஷா நிறுவனத்தை கையகப்படுத்த வேண்டும்.

2) மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, GST மற்றும் மூலப்பொருள் விலையேற்றத்தால் பஞ்சாலை போன்ற சிறு தொழில்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

3) கோவைக்கு தனி ரயில்வே கோட்டம் அமைக்கப்பட்டு, தென் தமிழக பகுதிக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.

4) கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் நிலையில், அதனை உடனடியாக நடை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5) 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பேரூர் கோவிலை புறந்தள்ளி, ஈஷா நிறுவனத்திற்கு மத்திய அரசின் மானியங்கள் வழங்கப்படக் கூடாது.

6) வரும் பிப்ரவரி 3ஆவது வாரத்தில் தொழில் பாதுகாப்பு மற்றும் மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

7) மத்திய அரசின் திட்டங்களை கோவை மக்களவை உறுப்பினர் தடுப்பதாக பொய் செய்தி பரப்பும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டிக்கும் விதமாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...