கோவையில் சுமைதூக்கும் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கிய மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

கோவை டி.கே. காய்கறி மார்க்கெட் அருகே பீடி கேட்டதற்கு தர மறுத்த சுமை தூக்கும் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (52). இவர் கோவை பி.பி வீதியில் தங்கி, டவுன்ஹால் பகுதியில் உள்ள டி.கே. காய்கறி சந்தையில் சுமை தூக்கும் பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், மணிகண்டன் கடந்த 3ஆம் தேதி தண்டு மாரியம்மன் கோயில் அருகே படுத்திருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மணிகண்டனிடம் பீடி கேட்டதாக தெரிகிறது.

அதற்கு மணிகண்டன் மறுத்த நிலையில், அந்த நபர் அங்கிருந்த இரும்பு கம்பியால் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில், பெரிய கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...