நீலகிரி மாவட்டத்திற்குள் வெளிமாநிலங்களில் இருந்து வளர்ப்பு பன்றிகளை எடுத்துவர தடை

ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்திற்குள் வெளிமாநிலங்களில் இருந்து வளர்ப்பு பன்றிகளை எடுத்து வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என கால்நடை பராமரிப்பு துறை எச்சரித்துள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்டு பன்றிகள் இறந்து வருகின்றன.



உடற்கூறு ஆய்வில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் தொற்றினால் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து கண்காணிப்பு பணியை தீவிரபடுத்திய நிலையில், ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் வீரியம் குறையும் வரை வளர்ப்பு பன்றிகளை வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் கொண்டு வரவும் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கால்நடை பராமரிப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளில் கால்நடை மருத்துவ குழு ஆய்வு மேற்கொண்டதில் எந்த பண்ணைகளிலும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் அறிகுறிகளோ நோய் தொடர்பான இறப்புகளோ எதுவும் இதுவரை இல்லை என்று தெரியவந்துள்ளது.

மேலும் அந்த வளர்ப்பு பன்றி பண்ணைகளை சுற்றி வேலிகள் அமைத்து காட்டுப்பன்றிகள் பண்ணையில் நுழையாதவாறும், பண்ணையைச் சுற்றி பிளீச்சிங் பவுடர் தெளிக்கவும் கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...