கோவை சாடிவயல் அருகே ஆற்றங்கரையோரத்தில் இறந்த யானையின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு - வனத்துறை விசாரணை

சாடிவயல் பெரியாற்றில் கிடந்த எலும்புக்கூடு 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடையது என்றும், யானை இறந்து சுமார் 3 மாதங்கள் ஆகியிருக்கலாம் என ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவ குழு தகவல்.


கோவை: கோவை மாவட்டம் சிறுவாணி வனப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள சாடிவயல் பெரியாற்றில் அப்பகுதி பழங்குடி கிராம மக்கள் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது ஆற்றங்கரை ஓரத்தில் இறந்த யானையின் எலும்புக்கூடுகள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.



இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போளுவாம்பட்டி வனச்சரக அதிகாரிகள் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். முதல் கட்ட ஆய்வில் இறந்தது 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது.



மேலும், யானை உயிரிழந்து சுமார் 3 மாதங்கள் ஆகி இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. யானையின் இறப்பிற்கான காரணம் குறித்து கண்டறிய எலும்புகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யானை உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...