புதிய தொழில்கள் தொடங்குவதற்கு உகந்த இடம் கோவை நகரம்! - ஆட்சியர் சமீரன் புகழாரம்

கோவையில், எளிதாக வணிகம் செய்வது தொடர்பான ஒருமுனை தீர்வு மையம் இணையதள பயன்பாடு தொடர்பான பயிற்சி பட்டறை கூட்டம், மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை ரெசிடன்சி ஹோட்டலில் FaMe TN. Guidance Tamilnadu சார்பில் எளிதாக வணிகம் செய்வது தொடர்பான ஒருமுனை தீர்வு மையம்(Single window Portal) இணையதள பயன்பாடு தொடர்பான பயிற்சி பட்டறை கூட்டம், மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வழிகாட்டி தமிழ்நாடு செயல் இயக்குநர் ஆஷா அஜித், FaMeTN பொதுமேலாளர் சக்திவேல் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திருமுருகன், மற்றும் தொழில்முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் சமீரன், கோவை மாவட்டத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, புதிய தொழில்களை ஊக்குவிக்கும் வகையிலும் தொழில் முனைவோர்களின் புதிய தொழில்களுக்கான அரசு அனுமதிகளை எளிமையாக்கும் வகையிலும் தொழில் துவங்குவதற்கு பல்வேறு அரசு அமைப்புகளிடம் அனுமதி பெறுவதை ஒற்றைச் சாளர முறைக்கு மாற்றப்பட்டு பல்வேறு துறைகளின் அனுமதிகள் இணையத்தின் மூலம் ஒரே வழியில் வழங்கப்பட்டு வருகின்றது.



கோவையில் ஒற்றை சாளரா முறையானது, அனுமதியினை எளிதாக வழங்கவும், வெளிப்படை தன்மையுடன் இருப்பதற்காகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம், ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரமாகவும், புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாகவும் உள்ளது. இங்கு ஏற்கனவே செயல்பட்டு வரும் பல்வேறு தொழில்களுக்கும், புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது.

ஒருமுனை தீர்வு மையம் இணையதள தெளிவுபடுத்துவதற்காக பயன்பாடு தொடர்பான இக்கூட்டம் நடத்தப்படுகிறது. சந்தேகங்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் வெளிப்படத்தன்மை, காலகட்டத்திற்கு ஏற்றவாறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தங்களது கருத்தை தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.

இதில் ஒற்றை சாளர இணைய முகப்பு தொடர்பான செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு முனை தீர்வு மையம் இணையதள பயன்பாடு தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...