கோவை மாதம்பட்டியில் கார் கவிழ்ந்து விபத்து - பள்ளி மாணவர்கள் காயம்

கோவை மாதம்பட்டி அடுத்த தென்கரை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் விவசாய நிலத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.


கோவை: கோவை சிங்காநல்லூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் கோவை குற்றாலம் செல்ல காரில் சென்றுள்ளனர்.

அப்போது தென்கரை அப்பச்சிமார் கோவில் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே விவசாய நிலத்தில் இருந்த வாழை தோட்டத்திற்குள் புகுந்தது.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் நான்கு மாணர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் காரில் இருந்த மாணவர்கள் அதிஷ்டவசமாக பாதிப்பின்றி உயிர் தப்பினர். சம்பவம் தொடர்பாக பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...