கோவையில் பிறந்த 5 மணி நேரத்தில் குழந்தையை புதரில் வீசிச் சென்ற கொடூரம்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் மருத்துவமனையின் பின்புறம் உள்ள மைதானத்தில் பிறந்து 5 மணி நேரமே ஆன ஆண் குழந்தையை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவில் உள்ள தனியார் மருத்துவமனையின் பின்புறம் மைதானம் ஒன்று உள்ளது.

அங்கு நேற்று மாலை 7 மணியளவில் புதர் பகுதியில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.



இதையடுத்து அங்கிருந்தவர்கள் அருகில் சென்று பார்த்த போது புதருக்குள் பிறந்து 5 மணி நேரமே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட சரியாக அறுக்கப்படாத நிலையில் கிடந்துள்ளது.

தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்து முதலுதவி செய்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நல்ல நிலையில் இருப்பதாகவும், அங்கு பால் புகட்டும் வசதி இல்லாததால் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே குழந்தையை அங்கு வீசிச் சென்றவர்கள் யார் என பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...