அண்ணாமலை குறித்து ஆபாச வீடியோ – கோவையில் பாஜகவினர் பரபரப்பு புகார்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து ஆபாச வார்த்தைகளால் பேசி வீடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் போத்தனூர் போலீஸில் புகார் அளித்தனர்.


கோவை: சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பத்திரிகையாளரிடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகளை வைத்து கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது தாயார் குறித்து ஆபாசமாகவும், அவதூறு பரப்பு வகையிலும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.



இந்த காட்சிகள் வைரலான நிலையில், பாஜக மாநில தலைவர் மற்றும் தயார் குறித்து அவதூறான கருத்துகளையும், ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மற்றும் தெற்கு மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன், உள்ளிட்டோர் போத்தனூர் போலீஸில் புகார் மனு அளித்தனர்.

உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர். இதனிடையே சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பரப்பிய நபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...