தமிழகத்தில் முதன்முறையாக பெண்களுக்காக..! - கோவையில் இரவு நேர மாரத்தான் போட்டி

தமிழகத்தில் முதல் முறையாக பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி ஜெம் அறக்கட்டளை சார்பில் பிப்ரவரி 25ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.


கோவை: பெண்களின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டும் பெண்களுக்கு வயிற்று பகுதி, கர்ப்பப்பை பகுதியில் வருகின்ற புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. அதற்கான லோகோ வெளியிடப்பட்டுள்ளது.



இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வெளியிட்டார். இந்த லோகோ வெளியீட்டு நிகழ்வில் ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேல் உட்பட ஜெம் அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த மாரத்தான் போட்டி குறித்து பேட்டியளித்த, ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேல், 'ஜெம் அறக்கட்டளை, தமிழ்நாடு அத்லட்டிக் அசோசியேஷன் அங்கீகாரத்தின் மூலம் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி பெண்களுக்கான மாரத்தான் போட்டி, மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த மாரத்தான் போட்டியானது தமிழகத்தில் முதன்முறையாக இரவு நேரத்தில் நடைபெறுகின்ற மாரத்தான் போட்டி என்றும் 3, 5, 10.4 கிமீ தூரம் என வெவ்வேறு பிரிவுகளில் மாரத்தான் போட்டிகள் நடக்க உள்ளதாகவும். 7 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்காக சிறப்பு மாராத்தான் போட்டியும் நடக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

பெண்களின் ஆரோக்கியத்தை மையமாக கொண்டு இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுவதாகவும், போட்டி நாளில் பெண்களுக்கான சத்துள்ள உணவுகள், யோகோ பயிற்சிகள் ஆகியவை எடுத்துக் கூறப்பட உள்ளதாகவும் கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...