சாலையில் நடந்து சென்றவரை தாக்கும் யானை - பரபரப்பான சிசிடிவி வீடியோ

கூடலூர் பகுதியில் பிடித்து சீகூர் வனப்பகுதியில் விடப்பட்ட பிஎம்-2 மக்னா யானை, கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள பத்தேரி நகரில் புகுந்து ஒருவரை தாக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக சுற்றி திரிந்த பிஎம்-2 மக்னா யானை, 50-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதபடுத்தியதுடன் 2 பேரையும் தாக்கி கொன்றுள்ளது.

இதனையடுத்து கடந்த மாதம் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு சீகூர் வன பகுதியில் விடபட்டது. ஆனால் அந்த யானை முதுமலை வழியாக கூடலூர் பகுதியை நோக்கி வந்தது.

அதனையடுத்து கும்கி யானைகளின் உதவியுடன் கர்நாடக வன பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அந்த யானை திடீரென. கேரளா மாநில எல்லையில் உள்ள முத்தங்கா வனப்பகுதிக்குள் சென்றது.

முத்தங்கா வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்த அந்த யானை இன்று அதிகாலை வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரி நகருக்குள் புகுந்தது.



முக்கிய சாலைகளில் உலா வந்த அந்த யானை அதிகாலை நேரத்தில் சாலையில் நடந்து சென்ற ஒருவரை தாக்கியது. அதில் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் அந்த யானை வேறு பகுதிக்கு ஓடியது. இதனிடையே மக்னா யானை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...