ஊட்டி பவானீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா விழா - களைக்கட்டிய தோடர்களின் பாரம்பரிய நடனம்

ஊட்டி அருகே உள்ள பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனத்தை ஒட்டி நடைபெற்ற தேர் ஊர்வலத்தில் தோடர் பழங்குடியின ஆண்கள் ஒன்று கூடி ஆடிய பாரம்பரிய நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.



நீலகிரி: ஊட்டியிலிருந்து முத்தொரை பாலாடா செல்லும் சாலையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டிற்கான 111-ஆம் ஆண்டு ஆரூத்ரா விழா நேற்று தொடங்கியது.



அதனை தொடர்ந்து இன்று அதிகாலை தேரின் வடத்தை பிடித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் தொடக்கி வைத்தார். தேரை நீலகிரி மாவட்டத்தின் பூர்வ குடிகளான தோடர் பழங்குடியின ஆண்கள் கோவிலில் இருந்து உதகை மத்திய பேருந்து நிலையம், மெயின் பஜார் வழியாக ஊட்டி மாரியம்மன் கோவிலுக்கு இழுத்து வந்தனர்.

அங்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன. அதனை தொடர்ந்து தோடர் இன பழங்குடியின ஆண்கள் மாரியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் வட்டமாக நின்று ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்தியவாறு தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினர்.



நூற்றுக்கும் மேற்பட்ட தோடர் இன ஆண்கள் பாரம்பரிய உடையுடன் நடனமாடியது சிறப்பாக இருந்தது. அதன் பின்னர் மீண்டும் பவானீஷ்வரர் தேர் காப்பி ஹவுஸ் சந்திப்பு வரை சென்று மீண்டும் கோவிலுக்கு கொண்டு செல்லபடுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...