முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை முகாம்

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தாயிடமிருந்து பிரிந்து தவிக்கும் காட்டுயானை குட்டிகள் மற்றும் பொதுமக்களை தாக்கி கொல்லும் யானைகளை பிடித்து வரப்பட்டு வளர்க்கபட்டு வருகின்றன. அதில் சில யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டும், சில யானைகள் கும்கிகளாகவும் உள்ளன.



இந்த நிலையில் யானைகளின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முகாமில் உள்ள யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.



அந்த பரிசோதனைக்கு பின் யானைகளின் உடல் எடைக்கு ஏற்ப உணவுகள் வழங்கபட்டு, உடல் பயிற்சிகள் வழங்கபடுகின்றன.



அதன் படி முதுமலை அருகே தொரப்பள்ளியில் உள்ள வனத்துறை சோதனை சாவடிக்கு யானைகள் அழைத்து செல்லபட்டு அவற்றின் உடல் எடை சோதனை செய்யப்பட்டது. வயதான யானைகள் மற்றும் மஸ்து யானைகள் தவிர்த்து முகாமிலிருந்த 19 யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...