தமிழகத்தின் ஆட்சி, நிர்வாகத்தை முடக்க மத்திய அரசு முயற்சித்து வருவது -கி.வீரமணி


தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி 356 சட்டப்பிரிவை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் செய்து வருவதாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை எனவும், தமிழகத்தின் ஆட்சி, நிர்வாகத்தை ஸ்தம்பித்து போகச்செய்ய மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படமால் தடுப்பதும், அரசியலமைப்பு சட்டப்படி செயல்படுவதும் தான் ஆளுநர் வேலை என கூறிய அவர், சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிடாமல் ஆளுநர் காலதாமதம் செய்வது ஜனநாயக விரோதம் என தெரிவித்தார். முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் ராஜினமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்ட பின்னர் அதனை அரசியலமைப்பு சட்டப்படி திரும்ப பெற வாய்ப்பில்லை எனவும், ஒ.பன்னீர்செல்வத்தை நிர்பந்தப்படுத்தி ராஜினமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியிருந்தால் அது தொடர்பாக ஆளுநரே விசாரணை நடத்தலாம் அல்லது சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு உரிமையுண்டு என தெரிவித்தார். 

ஆனால் பெரும்பான்மை உள்ளவர்களை நிருபிக்க சொல்லமால் ஆளுநர் தயக்கம் காட்ட என்ன காரணம்?  என கேள்வி எழுப்பிய அவர், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க நேரிடையாக தமிழகத்தில் காலுன்ற முடியாத சூழலில் குழப்பத்தை ஏற்படுத்தி 356 சட்டப்பிரிவை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் பலமாக நடந்து வருவதாக தெரிவித்தார். மேலும் ஆளுநர் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் எண்ணத்தை நிறைவேற்றும் கருவியாக தமிழ்நாட்டை காவிமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் பிணையகைதிகளாக அடைத்து வைத்திருப்பதாக எழுந்துள்ள புகாருக்கு ஆளுநரே பொறுப்பு எனவும் அவர் குற்றம்சாட்டினார். சசிகலா முதல்வராக பொறுப்பேற்க அரசியலமைப்பு சட்டப்படி எந்த தடையும் இல்லை எனவும், பா.ஜ.க.வினர் சசிகலா ஆதரவு, ஒ.பன்னீர்செல்வம் ஆதரவு என இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் தெரிவித்தார். தி.மு.க ஒ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாக சொல்லவில்லை எனவும், தற்போதைய சூழலில் தி.மு.க ஆட்சியமைக்க வாய்ப்பில்லை எனவும் கி.வீரமணி தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...