கோவை மாவட்ட அளவிலான கலைத்திருவிழா - இடிகரை அரசுப் பள்ளி முதலிடம்!

கோவை மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் இடிகரை அரசுப் பள்ளி அதிக பரிசுகளைப் பெற்று கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.


கோவை: பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவ மாணவிகளின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இதில் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் நடந்த கலைத் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கலைத்திருவிழாவில், கோவை இடிகரை அரசு பள்ளியைச் சேர்ந்த 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் கணியன் கூத்து, தேவராட்டம், மனிநேயப்பாடல் பிரிவுகளில் முதலிடத்தைப் பெற்றனர்.

அதே போல் 6வது முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் வீதி நாடகம், கும்மி நடனம், மனிதநேயபாடல், மனதில் பட்ட இயற்கை காட்சிகளை வரைதல் பிரிவுகளில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

மேலும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் உருமி இசைக்கருவி, இணைய கருத்துருவாக்கம், பானை ஓவியம் உள்ளிட்ட பிரிவுகளில் மூன்றாம் இடத்தைப் பெற்று கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் அதிக அளவு பரிசுகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது.



இதைத் தொடர்ந்து கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் சித்ரா தலைமையில் இன்று பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தியாகராஜன் பங்கேற்று சிறப்பு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.



மேலும் சென்னை மொபைல் சார்பில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...