கோவையில் குற்றவாளிகளின் குடும்பங்களுக்காக அறக்கட்டளை தொடக்கம்

தற்கொலை, விபத்து, பாலியல், கொலை குற்ற வழக்குகளால் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளின் உறவினர்களுக்கு மறுவாழ்வமைக்கும் மையமாக "கவசம்" என்ற கோவை மாநகர காவல்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது.



கோவை: கோவையில் தனியார் பங்களிப்புடன் கோவை மாநகர காவல்துறை சார்பாக "கவசம் பவுண்டேஷன்" என்ற அறக்கட்டளை துவக்கபட்டுள்ளது. சாலை விபத்து மற்றும் பாலியல் வழக்கு, கொலை, தற்கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று வரும் குற்றவாளிகளின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் குழந்தைகள், கல்விச் செலவு உள்பட பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.



இது போல் பாதிக்கபட்டவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களுக்கு உதவும் விதமாகவும் துவங்கபட்டதுதான் இந்த "கவசம்" பவுண்டேஷன். இதில் தனியார் மூலம் நன்கொடைகள் பெற்று, அதன்மூலம் பாதிக்கபட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

முதற்கட்டமாக கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற விழாவில் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் கலந்து கொண்டு 10 லட்சம் ரூபாய் நிதி உதவியை 25 குடும்பங்களுக்கு வழங்கினர்.



இந்த விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசுகையில், கோவை மாநகரில் சமுதாய குற்றங்கள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கவசம் பவுண்டேஷன் சார்பாக பொருள் மற்றும் கல்விக்கான உதவி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு போக்சோ மற்றும் பாலியல் வழக்குகள் 75, தற்கொலை வழக்குகள் 797 பதிவாகியுள்ளது. மேலும் இந்த சம்பவங்களால் மனநலம் பாதிக்கப்பட்டு அதன் மூலம் தற்கொலை சம்பவங்களும் அதிகரிக்கிறது.

விபத்துகளை பொருத்தவரை 269 விபத்துக்களும், 25 முதல் 30 கொலை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இந்த குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.



இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகளின் குடும்பங்களுக்கு உதவும் ஒரு நல்ல நோக்கத்திலேயே இந்த கவசம் பவுண்டேஷன் துவக்கபட்டுள்ளது. பாதிக்கபட்டவர்கள் யார் யார் என்ற புள்ளி விவரங்கள் அடிப்படையில் காவல்துறை சார்பில் ஆராய்ந்து, கணக்கிட்டு அவர்களுக்கு உதவிகள் வழங்கபடும்.

மேலும் பாதிக்கபட்டவர்களுக்கு மன ரீதியான ஆலோசனை தேவை ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் கவுன்சிலிங் கொடுக்க காவல்துறை அல்லது அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கோவை மாவட்ட நிர்வாகம், காவல் துறையினருடன் இணைந்து இந்த நல்ல தொடக்கத்தை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவையை பொறுத்தவரை மனிதாபிமானிகள் அதிக அளவில் உள்ள நகரம் என்றும், அரசு திட்டங்கள் சில காலம் காலதாமதம் ஆனாலும் அதனை முறையாக செய்து கொடுக்கப்படும் என்றார்.

மாவட்ட நிர்வாகம் சார்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு திட்டமும் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...