கோவையில் 'புகையில்லா போகி பண்டிகை' கொண்டாட வேண்டும் - கோவை மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்

போகிப் பண்டிகையையொட்டி கோவை மாநகராட்சியில் புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிக்கை.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் போகி பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ வரும் 14.01.2023 அன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு “புகையில்லா போகி”யை கடைபிடிக்கும்‌ விதமாக கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ பொதுமக்கள்‌ தங்கள்‌ வீடுகளில்‌ சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும்‌, மக்காத குப்பைகள்‌, அபாயகரமான குப்பைகள்‌ மற்றும்‌ இதர குப்பைகளை பொது இடங்களிலோ, குப்பைத்‌ தொட்டிகளிலோ மற்றும்‌ காலி இடங்களிலோ வீசி எரிய வேண்டாமென்றும்‌, தீ பற்ற வைத்து எரித்து விட வேண்டாம்.

பொதுமக்கள்‌ தங்கள்‌ வீட்டில்‌ சேகரிக்கப்படும்‌ குப்பைகளை தனித்தனியாக பிரித்து தினசரி குப்பைகளை சேகரிக்க வரும்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்களிடம்‌ வழங்கி “புகையில்லா போகி” பண்டிகையாக கடைபிடித்து, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதியை தூய்மையாக வைத்துக்‌ கொள்ள பொதுமக்களுக்கு இதன்‌ மூலம்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரதாப்‌ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...