பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..! - பல்லடத்தில் அமைச்சர் சிவசங்கர் பேட்டி

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களிடம் அதிக கட்டணத்தை வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்லடத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அழகுமலையில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.

இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பள்ளியின் சார்பாக மாவட்ட,மாநில அளவில் விளையாட்டு மற்றும் யோகாசன போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், ஜனவரி 12 முதல் 14ம் தேதி வரை சென்னையின் 5 பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் உள்பட தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதேபோன்று பொங்கல் பண்டிகை முடிந்த பின்பும் சென்னை கோவை திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அவரவர் சொந்த ஊர்களில் இருந்து திரும்ப வருவதற்கும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகளால் பொதுமக்கள் எந்தவித சிரமும் இன்றி சென்று வந்தனர்.அதே போன்று பொங்கல் பண்டிகைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படக்கூடாது, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் சங்கத்திடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை ஆணையாளர் மூலம் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையின் போது போக்குவரத்து விதிகளை மீறும், கட்டணங்களை உயர்த்தும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடக்க எடுக்கப்படும். இதற்காக தனி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டு. அவர்கள் ஆம்னி பேருந்துகள் சோதனை மேற்கொள்வார்கள் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ்,பள்ளி நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...