கோவை வழியாக மீன் வண்டியில் மறைத்து வைத்து கேரளாவுக்கு 200 கிலோ கஞ்சா கடத்தல் - 2 பேர் கைது..!

ஆந்திராவில் இருந்து கோவை வழியாக மீன் லோடு வண்டியில் மறைத்து வைத்து கேரளாவிற்கு கடத்தி செல்லப்பட்ட 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கலால் துறையினர், மயிலாடுதுறையை சேர்ந்த இருவர் கைது.


கோவை: ஆந்திரா மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு குறிப்பிட்ட வாகனத்தில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக கலால் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் வாளையார் அருகே கண்காணிப்பில் ஈடுபட்ட கலால் துறையினர், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக பதிவெண் கொண்ட வாகனத்தை துரத்தி சென்று, நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.



அப்போது மீன் லோடு ஏற்றிச் சென்ற அந்த வாகனத்தில், மீன் பெட்டிகளுக்கு இடையே மறைத்து வைத்து மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்திச் சென்றது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மூட்டைகளில் இருந்த சுமார் 200 கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாகனத்தில் இருந்த மயிலாடுதுறையை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் இருந்து கோவை வழியாக மீன் லோடு வண்டியில் கடத்தி செல்லப்பட்ட 200 கிலோ கஞ்சாவை கலால் துறை அதிகாரிகள், பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...