பொங்கலன்று நடக்கும் எஸ்பிஐ கிளார்க் தேர்வு - தேதியை மாற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வரும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கலன்று நடைபெறவுள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளார்க் தேர்வின் தேதியை மாற்றக்கோரி கோவை தலைமை தபால் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.


கோவை: வரும் ஜனவரி 15ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு அன்றைய தினத்தில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வை வேறு தேதியில் எஸ்.பி.ஐ நிர்வாகம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக கோவை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அர்ஜுன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பொங்கலன்று நடக்கும் கிளார்க் தேர்வின் தேதியை மாற்றக்கோரி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, தமிழகத்தை பொறுத்தவரை ஜனவரி 14, 15, 16, ஆகிய நாட்களில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்தகைய சூழலில் பாரத ஸ்டேட் வங்கி தேர்வில், தமிழகத்தில் காலியாக உள்ள 350 க்கும் மேற்பட்ட இடங்களுக்காக 5,000 க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வில் தமிழர்கள் அதிக அளவு கலந்து கொள்ள முடியாத சூழலை ஏற்படுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையில் தேர்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே தமிழர்களின் திருவிழா நாட்களில் எஸ்.எஸ்.ஐ, ரயில்வே உள்ளிட்ட துறைகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது.

தமிழர்களை அரசுப்பணியில் புறக்கணிக்கும் வேலையை விடுத்து , பண்டிகை இல்லாத காலங்களில் தேர்வுகளை நடத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும். ஒன்றிய அரசு பள்ளிகளில் மாட்டுப் பொங்கலன்று விடுமுறை அளிக்கப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...