கோவை கிணத்துக்கடவு அருகே சுடிதார் அணிந்து வீடு வீடாக சென்று செருப்பு திருடும் மர்ம ஆசாமி - வைரல் வீடியோ..!

கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரே உள்ள குடியிருப்புகளில் இரவு நேரத்தில் சுடிதார் அணிந்து சென்று செருப்பு திருடும் மர்ம ஆசாமியின் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீட்டு வாசல்களில் விடப்படும் செருப்புகள் அண்மை காலமாக காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செருப்புகள் காணாமல் போனதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேரமா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் கடந்த 2ம் தேதி இரவு பதிவான காட்சிகள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.



அந்த சிசிடிவி காட்சியில் நள்ளிரவு நேரத்தில் சுடிதார் அணிந்து வந்த மர்ம ஆசாமி ஒருவர் வீட்டு வாசலில் உள்ள செருப்புகளை எடுத்து செல்வதும், கண்காணிப்பு கேமராவை கண்டதும் முகத்தை மறைத்துக் கொண்டு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.



இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு, மர்ம ஆசாமி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...