கோவையில் அடுத்தடுத்து ஏ.டி.எம் மையங்களில் பேட்டரிகளை திருடும் மர்ம கும்பல் - போலீசார் விசாரணை

கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே செயல்பட்டு வந்த ஏடிஎம் மையத்திற்குள் இருந்த பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரியின் அருகே சிட்டி யூனியன் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்திற்குள் இருக்கும் அறையின் கதவை உடைத்து உள்ளே இருந்த பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து வங்கி மேலாளர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல், நேற்றைய தினம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம் மையத்துக்குள் இருந்த மூன்று பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...