கோவையில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இருவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..!

கோவை சிட்கோ அருகே மருத்துவ தம்பதியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்கள், தப்பிச்செல்ல முயன்ற நிலையில், பொதுமக்கள் பிடித்து போத்தனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



கோவை: கோவை மாவட்டம் சிட்கோ ஸ்ரீ சாய் நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசகர் (57). மருத்துவரான இவர், கோவை கே.ஜி.சாவடி பகுதியில் மனைவியுடன் சேர்ந்து சிறிய கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கிளினிக் சென்று விட்டு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டுக்குள் செல்ல முயன்ற போது அவரது வீட்டில் இருந்து ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் இருவர் வெளியே ஓடி வந்துள்ளனர்.

இதை கண்டு இருவரும் சத்தம் போட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் தப்பிச் செல்ல முயன்ற இருவரையும் மடக்கி பிடித்தனர். இதையடுத்து போத்தனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்ட நபர்கள் திருப்பூரை சேர்ந்த இம்ரான் (34), சத்தியமங்கலத்தை சேர்ந்த பரத்குமார் (35) என்பது தெரியவந்தது. மேலும், கூலி வேலை செய்து வந்த இருவரும், திட்டமிட்டு மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரியவந்தது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...