திருப்பூரில் கை, கால்களை கட்டிப்போட்டு வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் மூவர் கைது - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

கொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமார், சிறையில் இருந்தபோது தாங்கள், கஞ்சா பயன்படுத்துவதை போலீசாரிடம் காட்டிக் கொடுத்ததால் அவரை கொலை செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கள்ளம்பாளையம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கை, கால்கள் கட்டப்பட்டு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் காங்கேயம் அடுத்த மேட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த அஜித் குமார்(23) என்பதும், ராக்கியாபாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், திருப்பூரில் தங்கியிருந்த கோவையை சேர்ந்த வல்லரசு (24), திருப்பூரை சேர்ந்த கணேசன் (26) மற்றும் ஷாஜகான் (25) ஆகிய மூன்று பேரையும் திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட அஜித் குமாரும் கைது செய்யப்பட்ட மூவரும் கோவை மத்திய சிறையில் ஒன்றாக இருந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் மூன்று பேரும் கஞ்சா பயன்படுத்துவதாக சிறை நிர்வாகத்திடம் அஜித் குமார் காட்டி கொடுத்துள்ளார்.

இதனால் அஜித்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட மூவரும், ஜாமீனில் வெளியே வந்த நிலையில் அஜித்குமாரை வரவழைத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...