ஆம்புலன்ஸிஸ் தாய் உடன் புகார் அளிக்க வந்த மகள் - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கோவை தனியார் மருத்துவமனையில் 7 மாதங்களாக சுயநினைவின்றி இருந்த தாயை வெளியேற்றியதால், ஆம்புலன்ஸில் தாயை அழைத்துக் கொண்டு ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மகளால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு, 7 மாதங்களாக ரூ.20 லட்சம் வரை தனியார் மருத்துவமனையில் செலவு செய்த நிலையில், மருத்துவமனை நிர்வாகத்தினர் தனது நோயுற்ற தாயை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறி, தாயை ஆம்புலன்ஸில் அழைத்துக் கொண்டு ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மகளால் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து அவரது மகள் அளித்துள்ள புகாரில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் தனது தாய் திலகவதி மற்றும் தந்தை ஜெயச்சந்திரன் வசித்து வந்த நிலையில், கடந்த ஜூலை 5 ஆம் தேதி வீட்டில் இருந்த போது திடீரென்று எனது தாய் திலகவதி மயங்கி விழுந்து à®šà¯à®¯ நினைவை இழந்து விட்டார். 

உடனே, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அங்கும் சிகிச்சை சரியாக பார்க்காததால், கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு மூளையில் ஏற்பட்டிருந்த ரத்த கசிவை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்தனர். மேலும், தொண்டை மற்றும் நுரையீரலிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

அதே மருத்துவமனையில், தொடர்ந்து 7 மாதங்களாக ரூ.20 லட்சம் வரை செலவு செய்த நிலையில், சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்த எனது தாயை மருத்துவமனை நிர்வாகத்தினர் மிரட்டி வெளியே அனுப்பினர்.



எனவே, சிகிச்சையில் இருந்த தாயை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று திலகவதியின் மகள் பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார்.



ஆம்புலன்ஸில் தாயுடன் கோவை ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த நிலையில், நேற்று ஆட்சியர் இல்லாததால், அங்கிருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

பின்னர், தனது தாயை புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி, அங்கிருந்து ஆம்புலன்ஸில் புறப்பட்டு சென்றனர். 

இச்சம்பவத்தால், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...