20 மணிநேரம் தொடர்ந்து சிலம்பம், வால் வீச்சு - கோவை சிறுவன் உலக சாதனை

கோவையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ரித்விக் பிரனவ் தொடர்ந்து 20 மணி நேரம் சிலம்பம் சுற்றியும், வால் வீச்சு செய்தும் உலக சாதனை படைத்துள்ளார்.


நீலகிரி: கோவையைச் சேர்ந்த வேலுச்சாமி- சாந்தி தம்பதியின் 11 வயது மகன் 11 வயது சிறுவன் ரித்விக் பிரனவ். இவர் கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தொடர்ந்து 20 மணிநேரம், தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தில் நெடுங்கம்பு, நடுக்கம்பு சுற்றியும், ஆயுதப் பிரிவுகளான வால் வீச்சு, சுருள் வால் வீச்சு, வேல் கம்பு வீச்சு, மான் கொம்பு வீச்சு மற்றும் வாள் கேடயம் ஆகியவற்றை சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.



இந்த சாதனையை சாதனையை இந்தியா புக் ஆப் வோர்ல்ட் ரெகார்ட்ஸ், அமெரிக்கன் புக் ஆப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் மற்றும் யுரோப்பியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட உலக சாதனை அமைப்பினர் அங்கிகரித்துள்ளனர்.



இதுகுறித்து, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ் ராஜ் கூறியதாவது:

2023ம் ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழாவை வரவேற்கும் விதமாக, இந்த உலக உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை இந்தியன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், அமேரிக்கன் உலக ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் அமைப்பினர், யூரேப்பியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர் என மூன்று நிறுவனங்கள் இதனை அங்கீகரித்துடன், மாணவனின், சாதனையை, பாராட்டி சான்றிதல்களையும், கோப்பைகளையும், மெடல்களையும் வழங்கி பெருமைபடுத்தியுள்ளது.



இது குறித்து பேசிய சிறுவன் ரித்விக் பிரனவ், கடந்த 6 ஆண்டாக சிலம்பம் பயின்று வருவதாகவும், பொங்கல் திருவிழாவை வரவேற்கும் விதமாக இந்த சாதனையை செய்ததாக கூறினார்.

முன்னதாக, நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சதாம் ஹுசைன், இந்திய உணவுக் கழகத்தின் முன்னாள் ஆலோசனை குழு உறுப்பினர் உதய் தீப், தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் இந்திய தரக்கட்டுப்பாடு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் சாதனை படைத்த மாணவனுக்கு சான்றிதல்களையும், கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், முல்லை தற்காப்பு கலை அமைப்பின், மேளாளர், கார்த்திக், பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும், கலந்து கொண்டு, சாதனை படைத்த மாணவர்களுக்கு, பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...