திருப்பூர் பல்லடம் அருகே வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு..!

பல்லடம் அடுத்த காளிவேலம்பட்டி பகுதியை சேர்ந்த மயில்சாமி தனது காரை இயக்க முயன்றபோது திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் உடனடியாக கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் காளி வேலம்பட்டி பிரிவில் வசித்து வருபவர் மயில்சாமி. இவர் தனது ஜென் காரை வீட்டின் முன்பு நிறுத்துவது வழக்கம்.

அதேபோல், நேற்றிரவு வெளியில் சென்று திரும்பிய அவர் வீட்டின் முன்பு தனது காரை நிறுத்தியிருந்தார். இந்நிலையில், இன்று காலை வெளியில் செல்வதற்கு காரை இயக்கியுள்ளார்.

இதனிடையே பலமுறை இயக்கியும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. அப்போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக கீழே இறங்கிய மயில்சாமி காரின் முன் பகுதிக்கு செல்வதற்குள் தீ மளமளவென கார் முழுவதும் பரவியது.



இதனை தொடர்ந்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.

இதற்குள் கார் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. மயில்சாமி வாகனத்தை இயக்க முற்பட்டபோது எலக்ட்ரிகல் கோளாறு காரணமாக இன்ஜினில் புகை வந்து திடீரென தீப்பற்றி இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயில்சாமி உடனடியாக கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...