திருப்பூர் பல்லடத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் அசத்திய இளைஞர்கள்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் பல்லடத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடத்தப்பட்டது.



பல்லடம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.



50 கிலோ முதல் 75 கிலோ எடை பிரிவின்கீழ் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டி மேடையில் வரிசையாக நின்ற இளைஞர்கள், வண்ணம் பூசிய தங்களது கட்டுடலை பல்வேறு நிலைகளில் அழகுப்படக் காட்டி, திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். விசில் சத்தங்கள் முழங்க பார்வையாளர்களும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.



பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த ஆணழகன் போட்டியில், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்ற ஆணழகன்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும் அறிவிக்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தி.மு.க நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை அணிவித்து, நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...