தனியார் கல்லூரியில் கோவை விழா - உறியடி, சமையல் போட்டியுடன் கொண்டாட்டம்

கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த கோவை விழாவில், பாரம்பரிய உணவுகளை சமைத்தும், உறியடி நடத்தியும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.



கோவை: கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் கோயம்புத்தூர் விழா 2023 நடைபெற்றது. யுவா கிளப் மற்றும் தமிழ் மன்றம் இணைந்து பாரம்பரிய சமையல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தினர். இந்தப் போட்டிகளில் à®¤à®©à®¿à®¯à®¾à®°à¯ à®ªà¯Šà®±à®¿à®¯à®¿à®¯à®²à¯ கல்லூரி மாணவ- மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.



பாரம்பரிய சமையல் போட்டியில் , 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் பங்கேற்று விறகு அடுப்பில், மண்பானைகளைக் கொண்டு சமைத்தனர். தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், விறகு அடுப்பு மற்றும் மண்சட்டிகளை பயன்படுத்தி திருவாதிரை களி, கம்பு அடை, கேப்பை ரொட்டி போன்ற பல பாரம்பரிய உணவுகளை மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் செய்து பார்வையாளர்களை அசத்தினர்.



போட்டியாளர்கள் சமைத்த பாரம்பரிய உணவுகளை, கல்லூரி பேராசிரியர்கள் நடுவர்களாக இருந்து ருசித்துப் பார்த்து பரிசுபெறும் மாணவ-மாணவியர் குழுக்களைத் தேர்வு செய்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று அணிகளுக்கு யுவா கிளப் மற்றும் தமிழ் மன்றம் சார்பில் பணப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பாரம்பரிய உறியடிப் போட்டியில், 250-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பங்கேற்று, தங்களது கண்களைக் கட்டிக்கொண்டு ஆர்வத்தோடு உயரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பானைகளை குச்சியால் உடைத்து அங்கிருந்த பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...