விஜய், அஜித் இருவரில் யார் சூப்பர் ஸ்டார்? - கோவையில் நடிகர் மோகன் 'பளிச்' பதில்!

விஜய், அஜித் ஆகியோரில் யார் சூப்பர் ஸ்டார் என்ற விவாதம் சமூகவலைதளங்களில் சூடுபிடித்த நிலையில், கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மோகன், சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு அளித்துள்ள பதிலும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



கோவை: சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது 4 தலைமுறை ரசிகர்களும் அறிந்த ஒன்று. இந்த நிலையில், அண்மையில், கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களாக வலம்வந்து மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய், நடிகர் அஜித் ஆகியோரில் யார் சூப்பர் ஸ்டார்? என்ற விவாதம் சமூகவலைதளங்களில் எழுப்பப்பட்டு வைராகின.

இந்த நிலையில், கோவை திருமலையாம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சிறிய ரக திரையரங்க திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.



முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சினிமா குறித்தும், அதன் தற்போதைய வளர்ச்சி குறித்தும் பல்வேறு தகவல்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

காட்சி தொடர்பியல் மாணவர்களுக்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர் கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கல்லூரி வளாகத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் என்பது இந்தியாவிலேயே முதல்முறை என்பது பாராட்டுக்குரியது என்றும் நடிகர் மோகன் கூறினார்.

அப்போது, நடிகர் அஜித் நடிப்பில் துணிவு, நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படங்கள் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், அது தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த நடிகர் மோகன், "துணிவு, வாரிசு படங்களில் எதற்கு முதல் டிக்கெட் கிடைக்கிறதோ அதை பார்ப்பேன்" என்றார்.

இருவரில் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "விஜய், அஜித் இருவருமே சூப்பர் ஸ்டார்கள்தான். ஆனால் பட்டம் என்றால் அது ரஜினிகாந்திற்குத்தான்" என்றார்.

தொடர்ந்து பேசிய நடிகர் மோகன், "ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது இயக்கத்தின் கையில் தான் இருக்கிறது. படத்தின் கதை நன்றாக இருந்தால் மட்டுமே நடிப்பேன். அதுதான் திரைபடத்தில் இவ்வளவுநாள் நான் நடிக்காமல் இருக்கக் காரணம்.

கதை இயக்கம் பிடித்தால் மட்டும்தான் படம் பண்னுவேன். காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பம் மாறுகிறது. அதற்கு ஏற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டும். திரையரங்கில் மட்டும் படம் வெளியான நிலைமாறி ஓடிடி, தொலைக்காட்சிகள், இணையதளம் என புதிய படங்கள் வெளியிடப்படுகிறது" என்றும் தெரிவித்தார்.

மேலும், தற்போது, கதைக்களம் பிடித்ததால் ஹாரா என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாகவும், நம் வாழும் நாட்டில் எல்லோருக்கும் அடிப்படைச் சட்டங்கள் தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும் எனவும், ஆனால் நம் நாட்டில் வழக்கறிஞர்களுக்கு மட்டும்தான் அது தெரியும் நிலை இருப்பதாகவும் நடிகர் மோகன் குறிப்பிட்டார்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் அடிப்படை சட்டங்களை கற்றுக் கொடுத்துவிட்டால் ஒவ்வொருவரும் எப்படி வாழ முடியும், எப்படி வாழ முடியாது எனக் கற்றுக்கொள்வார் என்றும், அதன் மூலம் வருங்கால சமுதாயம் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்த நடிகர் மோகன், பள்ளி-கல்லூரிகளில் அடிப்படை சட்டங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...