திருப்பூர் பல்லடம் அருகே பஞ்சு மில்லில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் தீக்கிரையாகின

பல்லடம் அடுத்த சின்ன வடுகபாளையம் பகுதியில் உள்ள பஞ்சு அரவை ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள், உதிரி பாகங்கள் மற்றும் பஞ்சு ஆகியவை தீயில் எரிந்து சேதமாகின.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் சின்ன வடுகபாளையம் கிராமத்தில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான பஞ்சு அரவை ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்தில், பழைய இயந்திரங்கள், மற்றும் இயந்திர உதிரி பாகங்கள் உள்ளிட்டவை திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் ஆலையில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அங்கு செல்வதற்குள் தீ மளமளவென அங்கிருந்த இயந்திரங்களில் பரவியது.



இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கூடுதலாக மூன்று தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இச்சம்பவத்தில், பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், இயந்திர உதிரி பாகங்கள் மற்றும் பஞ்சு உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம் அருகே பஞ்சு மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு இயந்திரங்கள் உட்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...