திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு

திருப்பூரில் கணவர் கொடுமை குறித்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த இளம்பெண், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது மகள் சௌந்தர்யாவை, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவரது உறவினரான கோவை மாவட்டத்தை சேர்ந்த மனோகர் என்ற கட்டிட தொழிலாளிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இதனிடையே, குடிக்கு அடிமையான மனோகர் திருமணம் ஆனது முதல் சௌந்தர்யாவை அடித்து உதைத்து துன்புறுத்திவந்ததாகத் தெரிகிறது. இது குறித்து நியாயம் கேட்கச் சென்ற மஞ்சுளாவையும் மனோகர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, சௌந்தர்யா மற்றும் அவரது தாய் மஞ்சுளா ஆகியோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இரண்டு மாதங்களாகியும், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் சௌந்தர்யா, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.



அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், சௌந்தர்யாவை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

திருமணமான நான்கு மாதங்களிலேயே இளம்பெண் ஒருவர், குடிகார கணவரின் கொடுமை தாங்காமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...