கோவை சுந்தராபுரத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் செயின் திருட்டு!

கோவை சுந்தராபுரத்தில் பிரதமர் மோடி ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்துவிடுவதாகக் கூறி மூதாட்டியிடம் 4 சவரன் தங்க சங்கிலியைத் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மதுக்கரை போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சம்மாள்(77). இவர் கடந்த 30 ஆண்டுகளாக அதேபகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நஞ்சம்மாள் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்க உக்கடம் வந்துவிட்டு, மீண்டும் போடிபாளையம் செல்ல உக்கடம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தார்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர், தானும் போடிபாளையம் செல்வதாகவும், வேண்டுமென்றால் உடன் அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பி இருசக்கர வாகனத்தில் நஞ்சம்மாள் சென்றுள்ளார். அப்போது பொள்ளாச்சி சாலையில் உள்ள சுந்தராபுரம் தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது, அந்த நபர் இருசக்கர வாகனத்தை திடீரென நிறுத்தியுள்ளார்.

அப்போது பேச்சுக் கொடுத்த அவர், பிரதமர் மோடி ஓய்வூதிய திட்டத்தில் நஞ்சம்மாளை சேர்த்து விடுவதாகவும், இந்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் வங்கிக் கணக்கிற்குப் பணம் வரும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த திட்டத்தில் சேர புகைப்படம் ஒன்றை எடுக்க வேண்டும் எனும் கூறி, நஞ்சம்மாளை கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை கழட்டி பேப்பரில் சுற்றி வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதை நம்பிய அவரும், தங்க செயினை கழட்டி பேப்பரில் மடித்து வைத்துள்ளார். பின்னர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்ட அந்த நபர், திட்டத்திற்கு விண்ணப்பிக்க பத்திரத்தாள் வாங்கி வருவதாகக் கூறி, நஞ்சம்மாளை அங்கேயே காத்திருக்கச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார்.

வெகுநேரமாகியும் அந்த நபர் வராததால், பேப்பரை சோதனை செய்தபோது அதிலிருந்த 4சவரன் தங்கசெயின் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து நஞ்சம்மாள் போத்தனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து செயினை திருடிச்சென்ற மர்மநபரைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...