உதகையில் ஹெத்தையம்மன் திருவிழா - பாரம்பரிய உடையணிந்து படுகர் இனமக்கள் கொண்டாட்டம்..!

உதகை அடுத்த பேரகணி பகுதியில் உள்ள ஹெத்தையம்மன் கோவில் திருவிழாவில், படுகர் இன மக்கள் பாரம்பரியமான வெண்மை நிற உடையணிந்து நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் பேரகணி பகுதியில் உள்ள ஹெத்தையம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

இந்த ஹெத்தையம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வாரம் கோத்தகிரி அருகே உள்ள பேரகணியில் தொடங்கியது.



இந்நிலையில், முக்கிய நிகழ்வான ஜெகதளா ஹெத்தை திருவிழா இன்று நடைபெற்றது.



இந்த திருவிழாவில் ஜெகதளா மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் வசித்து வரும் படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய வெண்மை நிற ஆடைகளை அணிந்து வந்திருந்தனர்.



முன்னதாக ஹெத்தையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.

இந்த நிகழ்வுக்காக 48 நாட்கள் விரதம் இருந்த படுகர் இன ஆண்கள் மற்றும் கோவில் பூசாரிகள் கலந்து கொண்டு ஹெத்தை அம்மனை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.



முக்கிய வீதிகளின் வழியாக வந்த ஹெத்தையம்மனை படுகர் இன சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கும்பிட்டு வழிபட்டனர்.



அப்போது ஹெத்தை அம்மனுடன் படுகர் இன ஆண்கள் கைகளில் செங்கோலை ஏந்தியபடி பக்தி பரவசத்தடன் வரிசையாக ஊர்வலமாக சென்றனர்.



படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையான வெண்மை நிற உடை அணிந்து வந்து கொண்டாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...