கோவை குருடம்பாளையத்தில் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்

குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.எஸ்.கே.நகர் மற்றும் வடமதுரை நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை ஒன்றியச் செயலாளர் கார்த்திக் தொடங்கி வைத்தார்.


கோவை: தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு இன்று முதல் பொங்கல் சிறப்புத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.



இதன் ஒரு பகுதியாக, கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.எஸ்.கே.நகர் மற்றும் வடமதுரை நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியினை ஒன்றிய செயலாளர் கார்த்திக் தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சியில் ஒன்றியக் கவுன்சிலர் ஆறுச்சாமி, குருடம்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் வசந்தாமணி விஸ்வநாதன், மாவட்ட பிரதிநிதி அருணா நகர் சண்முகம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சகா விக்னேஷ், வார்டு கவுன்சிலர் வளர்மதி, கிளைச் செயலாளர் சுரேஷ், தினகரன், முன்னாள் ஒன்றிய பிரதிநிதி பூபதி, நிர்வாகிகள் அம்மன் கனகராஜ், ஸ்ரீதர், தில்லை நடராஜன், மணிகண்டன், தியாகராஜன், தலைமைக் கழகப் பேச்சாரளர் உடுமலை தண்டபாணி, ரஞ்சித், ஆறுமுகம், ஆட்டோ ஸ்டாண்ட் நண்பர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...