பணி நிரந்தரம் செய்யுங்கள்..! - உதகை தாவரவியல் பூங்கா முன்பு தோட்டக்கலைத்துறை தொழிலாளர்கள் போராட்டம்

உதகை அரசு தாவரவியல் பூங்கா முன்பு தோட்டக்கலைத்துறை பூங்காக்கள் மற்றும் அரசு பண்ணைகளில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் à®ªà¯‚ங்கா à®‰à®³à¯à®³à®¿à®Ÿà¯à®Ÿ அரசு பூங்காக்கள் மற்றும் குன்னூர் பழபண்ணை, நஞ்சநாடு பண்ணை உள்ளிட்ட 14 தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் 700-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இவர்களுக்குத் தினக் கூலியாக நாள் ஒன்றுக்கு 425 ரூபாய் மட்டுமே பெற்று பணப் பலன்கள் இன்றி பணியாற்றி வருகின்றனர்.



இதனையடுத்து 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோரைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி பணப் பலன்களை பிடித்தம் செய்ய வேண்டும், பணி மூப்பு அடிப்படையில் ஊக்கத் தொகை உயர்த்தி வழங்க வேண்டும், காலியாக உள்ள இடங்களைத் தற்காலிக பணியாளராக உள்ள தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப நிரப்ப வேண்டும், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு நிதித்துறை ஆணைபடி தற்போது உள்ள தொழிலாளர்களைப் பண்ணை பணியாளர்களை அங்கீகாரிக்க வேண்டும்.



உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை அரசு தாவரவியல் பூங்கா முன்பு பூங்கா மற்றும் பண்ணை தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது தமிழக அரசு உடனே தங்களது கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...