உதகையில் ஜீரோ டிகிரி வெப்பம் - உறைபனியால் முடங்கிய இயல்பு வாழ்க்கை!

நீலகிரி மாவட்டம் உதகையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை வெப்பநிலை 0 டிகிரிக்கு சரிந்து, உறைபனி பொழிந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது.



நீலகிரி: மலைகளின் ராணி என்ற பெருமைக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒன்று. குளிர்காலங்களில் இங்கு அதிகப்படியான குளிர் மற்றும் உறைபனிப் பொழிவு இருக்கும்.



தற்போது, குளிர்காலம் என்பதால், உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இன்று அதிகாலை கடும் உறை பனிப்பொழிவு காணப்பட்டது.

உதகையில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிரான சூழல் நிலவியது.



இந்த நிலையில், உதகை அருகே உள்ள தலைகுந்தா, அவலாஞ்சி, காந்தள் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை O டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அரசு தாவரவியல் பூங்காவில் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானது.

இதனால், உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இன்று காலை அதிகப்படியான உறைப் பனிப்பொழிவு காணப்பட்டது.



உதகை குதிரைப்பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா, எச்.பி.எஃப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்டடங்கள், பச்சை புல்வெளிகளில் உறை பனி படிந்து, வெள்ளை கம்பளம்போல் காட்சி அளித்தது.



அதுமட்டுமின்றி, அப்பகுதியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனங்களின் மீதும், விவசாய பயிர்களின் மீதும் உறைபனியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

இந்த உறைபனியால் காலை 10 மணி வரை கடுமையான குளிர் நிலவியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டதால் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...