கோவையில் மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்த காட்டுயானைகள் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கோவை சின்ன தடாகம் பகுதியில் விவசாயியின் தோட்டத்தில் இன்று அதிகாலை நுழைந்த காட்டு யானைகள், அங்குள்ள மாட்டுக்கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த தீவனப் பொருட்களை உண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள தடாகம், கணுவாய் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது.

இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டுயானைகள் அவ்வப்போது ஊர் பகுதிக்குள் வந்தவண்ணம் உள்ளன. கடந்த சில தினங்களுக்குமுன்பு அதிகாலையிலேயே அங்குள்ள சாலைகளில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் மக்கள் அச்சத்தில் இருந்துவந்தனர்.

அதுமட்டுமின்றி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை சின்ன தடாகம் அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சார்ந்த விவசாயி நரசிம்மராஜ் என்பவரது தோட்டத்திற்குள் இரண்டு காட்டுயானைகள் அதிரடியாக நுழைந்தன.



அங்குமிங்கும் நடமாடிய யானைகள், தோட்டத்தில் உள்ள கொட்டகை ஒன்றில் நுழைந்து, அங்கு மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தவிடு,புண்ணாக்கு, மக்காச்சோள உள்ளிட்ட தீவனங்களை உண்டு சென்றுள்ளது.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளதால், சின்னதடாகம் மற்றும் பாப்பநாய்க்கன் பாளையம் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



இதனைத் தொடரந்து, அருகில் உள்ள ரங்கசாமி, உதயகுமார் ஆகியோரின் தோட்டத்திற்குள்ளேயும் இந்த யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

உணவு மற்றும் தண்ணீர் தேடி மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை, அப்பொழுதே வனத்துறை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தால் மட்டுமே தங்களது உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...