மாலை 3 மணிக்கு விழிப்புணர்வு அவசர கூட்டம் - கோவை மருந்து வணிகர்களுக்கு அழைப்பு

கோவை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை, சுகாதாரத்துறை இணைந்து இன்று (10.01.2023) மாலை 3 மணியளவில் சமரச சுத்த சன்மார்க்க சங்க கட்டிடத்தில் நடைபெறவுள்ள விழிப்புணர்வு அவசர கூட்டத்தில் அனைத்து மருந்து வணிகர்கள் பங்கேற்க அழைப்பு.


கோவை: கோவை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை, சுகாதாரத்துறை, மருந்து வணிகர் சங்கம் இணைந்து நடத்தும் அவசர கூட்டத்தில் அனைத்து மருந்து வணிகர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் மருந்து இருப்பு பராமரித்தல், வலி நிவாரணி மாத்திரைகள், கருத்தடை மாத்திரைகள், இவ்வகையான மருந்துகள் விற்பனை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளக்கப்பட உள்ளன.

இதற்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று (10.01.2023) மாலை 3 மணியளவில், சமரச சுத்த சன்மார்க்க சங்க கட்டிடத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வானது, கோவை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தில், மருந்து கட்டுப்பாட்டு துறை துணை இயக்குனர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மற்றும் அனைத்து மருந்து ஆய்வாளர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்க உள்ளனர்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து வணிகர்களும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...