விமானங்களில் பயணிகள் அநாகரீகமாக நடக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு! - மூத்த விமானி பகத்சிங் கவலை

கரோனா நோய்தொற்று பரவலுக்கு பின் விமானங்களில் பயணிகள் சிலர் அநாகரீகமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று தமிழகத்தை சேர்ந்த மூத்த விமானி பகத்சிங் தெரிவித்துள்ளார்.


கோவை: விமான பயணத்தின் போது மதுபோதையில் இருந்த நபர், ஒரு மூதாட்டி மீது சக சிறுநீர் கழித்த சம்பவம், விமான பணிப்பெண்களை மானபங்கம் செய்தல் உள்ளிட்ட சம்பவங்கள் மீது அளிக்கப்பட்ட புகார் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.



விமானத்தில் பயணிகள் சுயஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும், தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமானிகள் வலியுறுத்தியுள்ளனர்.



இதுகுறித்து தமிழகத்தை சேர்ந்த மூத்த விமானி பகத்சிங் கூறியதாவது:

சமீபத்தில் நடந்த சக பயணி மீது சிறுநீர் கழித்தது, பணிப்பெண்களை கேலி செய்தது உள்ளிட்ட அனைத்து அநாகரீக செயல்களும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

விமான பயணசீட்டு வாங்கிவிட்டால் விமானமே தங்களுடையது என்ற மனநிலையில் இருந்து விமானிகள் மாற வேண்டும்.

சுயஒழுக்கம், சக பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை மதித்து நடக்கும் மனிதநேயத்தை பயணிகள் கொண்டிருக்க வேண்டும்.

எனது அனுபவத்தில் விமானத்தில் பயணிகள் சிலர் அநாகரீகமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. பெரும்பாலும் புகார்கள் அளிக்கப்படுவதில்லை.

ஆனால், கரோனா நோய்தொற்று பரவலுக்கு பின் குறிப்பாக சர்வதேச விமானங்களில் பயணிகள் சிலர் அநாகரீகமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

அளவுக்கு அதிகமாக மதுபோதை அருந்தி பயணிப்பது. சக பயணிகள் மற்றும் விமான ஊழியர்களிடம் சண்டையிடுதல் உள்ளிட்டவை தொடர்கதையாகி வருகின்றன.

இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சட்டங்கள் உள்ளபோதும் அதை அமல்படுத்துவது யார் என்பதில் விமான நிறுவன நிர்வாகம், மத்திய தொழிற்பாதுகாப்பு படை, உள்ளூர் காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் அலட்சியம் காட்டப்படுகிறது.

பயணிகள் பலர் புகார் அளிக்கவும் முன்வருவதில்லை. நான் பணியாற்றி விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணித்த இளம்பெண் பயணி ஒருவர் பிசினஸ் கிளாஸ் வகுப்பு வழியாக கடக்க முயன்றார்.



சட்டவிதிகளின்படி அது தவறு என்பதால் பணிப்பெண் அறிவுரை வழங்கினார். அவேசமடைந்த இளம்பெண் பயணி மிகவும் அநாகரீகமான வார்த்தைகளால் பணிப்பெண்ணை திட்டினார்.

என் கண்முண்ணே இந்நிகழ்வு நடந்தது. நான் புகார் அளிக்க நடவடிக்கை மேற்கொண்டபோது மூத்த பணிப்பெண், இளம்பெண் எதிர்காலத்தை கருதி புகார் அளிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

விமான பணிப்பெண் பயணிகள் வீட்டில் வேலை செய்பவர்கள் அல்ல. அவர்களும் மனிதர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அநாகரீக செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க அரசுதுறைகள் ஒன்றிணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேல் பயணிகளின் மனநிலை மாற வேண்டும். அதுவே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...