வாரிசு, துணிவு படங்களின் 4 நாட்கள் சிறப்பு காட்சிகள் ரத்து - தமிழ்நாடு அரசு கொடுத்த ட்விஸ்ட்!

பொங்கலுக்கு வெளியாகும் அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு படங்களின் ஜனவரி 13, 14, 15, 16 ஆகிய நான்கு நாட்களில் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான நடிகர் விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு, துணிவு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை(11ஆம் தேதி) நள்ளிரவு 1மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு ஒரே நாளில் வெளியாக உள்ளது. 9 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாகி உள்ளது.

இந்த படங்களை இருவரது ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு முதல் நாளிலே பார்க்க தயாராகி வருகின்றனர். இதற்கான டிக்கெட் விற்பனையும், சனிக்கிழமை தொடங்கியது. குறிப்பாக இணையதள டிக்கெட் விற்பனை தொடங்கி சில மணி நேரங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் டிக்கெட்டை வாங்கினர்.

இந்நிலையில், ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு காட்சிகளுக்காக டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஆயிரம் முதல் 2000 வரையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இதனால் படம் ரீலிஸ் ஆவதையொட்டி சில முக்கிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 13, 14, 15, 16 ஆகிய நான்கு நாட்களுக்கு துணிவு வாரிசு படங்களுக்கான அதிகாலை சிறப்பு காட்சிகளான 4 மணி மற்றும் 5 மணி ரத்து செய்யப்படுகிறது.

இந்த திரைப்படங்களுக்கான அதிகாலை காட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள், காவல் ஆணையர்கள் அனுமதி தரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பட குழு சார்பில் ஜனவரி 11ஆம் தேதி மட்டுமே சிறப்பு காட்சிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

அந்த காட்சிகளை ரத்து செய்வதாக அரசு தெரிவிக்கவில்லை. மாறாக பொங்கல் பண்டிகையையொட்டி ஏதேனும் காட்சிகள் போடப்படுமா? என்ற கேள்விக்கு மட்டுமே தற்போது பதில் கிடைத்துள்ளது. மேலும் தியேட்டர்களில் பெரிய கட் டவுட்களை வைத்து பால் அபிஷேகம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கக்கூடாது. டிக்கெட் பின்புறம் திரையரங்குகளின் ஏதேனும் பிரச்சனை தொடர்பான புகார் அளிக்க தியேட்டர் உயர் அதிகாரியின் பெயர், செல்போன் நம்பர், இமெயில் முகவரி அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நிர்ணயிக்கப்பட்டதை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...