திருப்பூரில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற த.பெ.தி.க.வினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு..!

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற நிலையில், போலீசார் அவர்களை தடுக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


திருப்பூர்: தமிழக சட்டப்பேரவை நேற்று கூடிய நிலையில் தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் திராவிட மாடல் ஆட்சி மற்றும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், அம்பேத்கர் உள்ளிட்ட பெயர்களை குறிப்பிடாமல் பேசிய ஆளுநருக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆளுநர் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், கிழித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



இதனையடுத்து, ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.



அப்போது காவல்துறையினர் அவர்களை தடுக்க முயன்ற நிலையில் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...