பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் - நியாய விலைக்கடைகளில் கோவை ஆட்சியர் ஆய்வு

கோவையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி வரும் நியாயவிலைக்கடைகளில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், பொங்கல் பரிசாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10லட்சத்து 99 ஆயிரத்து163 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 1089 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் என மொத்தம் 11லட்சத்து 252 குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காகக் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ரூ. 11ஆயிரத்து 806 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக வீடுகள் தோறும் டோக்கன்கள் வழங்கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இணைக்கப்பட்ட நியாய விலைக்கடைக்குச் சென்று சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துப் பொங்கல் பரிசு தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், தங்கள் குடும்ப அட்டை இணைக்கப்பட்ட நியாய விலைக் கடைகளில் மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும். அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று லிங்கசெட்டிவீதி, தெப்பக்குளம் வீதியில் உள்ள ஸ்ரீராம லிங்க சௌடேஸ்வரி கூட்டுறவு பண்டகம், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி கடை ஆகிய நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலையும் வழங்கப்பட்டது.



இங்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பரிசுத்தொகுப்புகள் சரியாக வழங்கப்படுகிறதா எனவும், ரொக்கம் ரூ.1000 வழங்கப்படுகிறதா என்பதையும் பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...