புகையில்லா 'போகி' - திருப்பூர் மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்!

திருப்பூரில் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில், புகையில்லா போகி பண்டிகை கொண்டாட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் மாசு ஏற்படுத்தும் வகையில் போகி தினத்தன்று பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும், நாளை முதல் நான்கு மண்டலங்களிலும் மாநகராட்சி ஊழியர்கள், வீடுகளுக்கு வரும்போது அவர்களிடம் எரிக்க வேண்டிய பொருட்களை கொடுத்து, புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கிராந்திகுமார் பாடி வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய மாநகராட்சி ஆணையர், பொதுமக்கள் குப்பைகளை வழங்கும்போது மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கி மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்.

இத்திட்டத்தினை திறம்பட செயல்படுத்த மாநகராட்சி ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...