கோவை வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் அரசின் அன்னதான திட்டம் - தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

துடியலூர் அடுத்த வடமதுரையில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருந்தீஸ்வரர் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள வடமதுரை பகுதியில் 1000 ஆண்டுகள் பழமையான விருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.



இந்த விருந்தீஸ்வரர் கோவிலில் வரும் பக்தர்களுக்கு தமிழக அரசால் அன்னதான திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.



இதனை தொடர்ந்து விருந்தீஸ்வரர் கோவிலில் இந்து அறநிலையத்துறை ஆணையர் பரஞ்சோதி, திமுக மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.



இந்த நிகழ்வில், உதவி ஆணையர் கருணாநிதி, செயல் அலுவலர் லோகநாதன், ஆய்வாளர் சரண்யா, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், துணைச் செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி, ஊராட்சித் தலைவர் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.

அதேபோல் டியூகாஸ் துணைத்தலைவர்கள் செல்வராஜ், மோகன்ராஜ், தம்புராஜ், சண்முகம், கவுன்சிலர்கள் கலா சாந்தாராம், மாணிக்கம், சூர்யா வெள்ளியங்கிரி, சண்முகசுந்தரம், முன்னாள் தலைவர் அருள்குமார், மருதாசலம், அசோக், பார்த்திபன், ரங்கநாயகி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...