'கோடங்கிபாளையத்தில் கல்குவாரி அமைக்கலாமா..?' - மக்களுடன் திருப்பூர் ஆட்சியர் ஆலோசனை!

திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் பகுதியில் கல்குவாரி அமைப்பது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வினீத் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் பகுதியில் கல்குவாரி அமைப்பது தொடர்பான கருத்துக்கணிப்பு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது.



இதில் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் பல்லடம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், கல்குவாரி அமைக்கப்படுவதால் தங்களது விவசாயம் பாதிக்கப்படும் எனவும், கால்நடைகள் வளர்ப்பதும் கேள்விக்குறியாகும் என்பதால் கல்குவாரி அமைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



கல்குவாரி உரிமையாளர்கள் சார்பில், குவாரி அமைப்பதால், விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பாதுகாப்பு முறைகளும் பின்பற்றியே அமைக்கப்பட இருப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு மேற்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.



இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வினீத், அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...