வாரிசு படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை?- பல்லடத்தில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளால் வாட்ஸ் ஆப்பில் வாரிசு பட டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பனை செய்வது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் நாளை தமிழகம் முழுவதும் ரீலிஸ் ஆகிறது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் நாளை வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது.



இத்திரைப்படத்தின் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் 550 ரூபாய்க்குக் கிடைக்கும் என விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தகவல்கள் பரபரப்பட்டு, தற்போது வாட்ஸ் ஆப்பில் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.

முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டை அதிக விலைக்கு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளே விற்பனை செய்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



மேலும் வாரிசு திரைப்படத்தின் டிக்கெட்டை வாட்ஸ் ஆப்பில் அதிக விலைக்கு விற்பனை செய்து வரும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீதும், திரையரங்கு மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்குப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...