ஈஷா மையம் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சி - கோவையில் இந்து முன்னணி மாநில தலைவர் குற்றச்சாட்டு

ஆன்மீக மையமான ஈஷா மீது களங்கம் ஏற்படுத்தி பொது அமைதியை சீர்குலைக்கும் கம்யூனிஸ்ட் நக்சல்களைக் கண்டித்து கோவையில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: ஆன்மீக மையமான ஈஷா மீது களங்கம் ஏற்படுத்தி பொது அமைதியை சீர்குலைக்கும் கம்யூனிஸ்ட் நக்சல்களை கண்டித்து கோவை மாவட்ட மாநகர் இந்து முன்னணி சார்பில் மாபெரும் கண்டன தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.



இதில் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், கோவை ஈஷா மையம் பொறுத்தவரை எந்த மதமும் சம்மதம் தான். இந்தியா அல்லாமல் அனைத்து நாடுகளிலும் யோகா பயின்று வருகிறார்கள். இதனை உடைக்க வேண்டும் என ஒரு சிலர் முயற்சி செய்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், கோவை தொழில் நகரத்தை கம்யூனிஸ்ட்டுகள் முடக்கப் பார்க்கிறார்கள்.

மேலும் ஈஷா மையத்தைப் பொருத்தவரை கல்வி மற்றும் மருத்துவத்தை ஏழை, எளிய மக்களுக்குக் கொடுத்து நல்ல காரியம் செய்து வருகின்றனர். இந்துக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் இந்து முன்னணி களத்தில் இறங்கும் என தெரிவித்தார்.



தொடர்ந்து பேசிய அவர்,உதயநிதி இன்று காலை ஒரு அறிக்கையை விட்டுள்ளார். அதில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுநரை ஓட விட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.



முதல்வர் ஸ்டாலின் சட்டையைக் கிழித்து வந்தாரே அதைப் பத்தி பேசினாரா? சுபஸ்ரீ மரணம் நக்சல் வேலையாக இருக்குமோ? எனச் சந்தேகம் உள்ளது. காவல்துறை உரிய விசாரணை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...